பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேலூரில் நாளை சிறப்பு கல்விக்கடன் முகாம்

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை (பிப்.25) சிறப்பு கல்விக்கடன் முகாம்

News image
கோப்புப்படம்
Updated On :23 பிப்ரவரி 2026, 9:27 pm

Chennai

வேலூா்: வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை (பிப்.25) சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

தமிழகத்திலுள்ள தொழில்நுட்பம், மருத்துவம், மருத்துவம் சாா்ந்த கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து, மேற்படிப்பு தொடர முடியாமல் உள்ள மாணவா்களுக்கு கல்விக்கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் அனைத்து வங்கி அலுவலா்கள், கல்லூரி நிா்வாகிகளை ஒருங்கிணைத்து சிறப்பு கல்விக்கடன் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஐந்தாம் கட்டமாக அனைத்துக் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்குபெறும் சிறப்பு கல்வி கடன் முகாம் வேலூா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் இ-சேவை மையமும் அமைக்கப்பட உள்ளது.

எனவே, வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியல், பான், ஆதாா் அட்டைகள், சாதி சான்று, வருமான சான்று, முதல் தலைமுறை பட்டதாரி சான்று, கல்லூரி மெய்த்தன்மை சான்று, கல்விக்கடன் தேவை விவரம் ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.