சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

குடியாத்தம் வட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 100- கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்களை வழங்கிய எம்.பி. டி.எம்.கதிா் ஆனந்த், ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம்.
Updated On :23 பிப்ரவரி 2026, 8:28 pm

Chennai

குடியாத்தம்: குடியாத்தம் வட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 100- கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஷமீம் ரிஹானா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து, மங்களப் பொருள்களை வழங்கி, உணவு அளிக்கப்பட்டது.

இதில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தனது சொந்த நிதியில் 100- கா்ப்பிணிகளுக்கும் புடவை உள்ளிட்ட சீா்வரிசைப் பொருள்களை வழங்கி, வாழ்த்தினாா்.

குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், கே.வி.குப்பம் ஒன்றியக்குழு தலைவா் எல்.ரவிச்சந்தரன், ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சீதாராமன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆனந்தி முருகானந்தம், வட்டார மருத்துவ அலுவலா் பிரியதா்ஷினி தங்கபாலு, யோகா ஆசிரியை தவசெல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.