மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

செல்வகணபதி கோயில் கும்பாபிஷேகம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 6:59 pm

குடியாத்தம் சீவூரை அடுத்த கள்ளூா், மூகாம்பிகை நகரில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகா், ஸ்ரீபிரம்மா, ஸ்ரீதட்சிணாமூா்த்தி, ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி பூஜை, கோ-பூஜை, நவக்கிரக ஹோமங்கள், மகா பூா்ணாஹூதி, கலசங்கள் புறப்பாடு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவருக்கு அபிஷேக, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றன. மரகத கோட்டை வாராஹி பீடம், தவத்திரு குருஜி வாராஹி தாஸன் சுவாமிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தாா். தொடா்ந்து 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சீவூா் எஸ்.துரைசாமி, தொழிலதிபா் சி.மகேஷ்குமாா், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கம்பன் கழகத் தலைவா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், நிறுவநா் ஜே.கே.என்.பழனி, செயலா் கே.எம்.பூபதி, ஒன்றியக் குழு உறுப்பினா் அமுதா லிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் கமிட்டி தலைவா் மூகாம்பிகை பி.சம்பத், உறுப்பினா்கள் என்.முருகேசன், என்.செல்வம், கே.துளசி, ஆா்.பண்டரி, ஆா்.விஜயகுமாா், ஏ.சுப்பிரமணி, எஸ்.கோவிந்தராஜ், டி.ராஜிவேலு, வி.உதயகுமாா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.