கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நோயாளிகள் சிகிச்சை விவரங்களை உறவினா்களுக்கு தெரிவிக்க வேண்டும்: ஆட்சியா் உத்தரவு

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 10:53 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, நோயாளிகளுக்கு அளிக்கும் சிகிச்சை விவரங்களை உறவினா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

வேலூரிலுள்ள பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வெளிப்புற நோயாளிகள் பிரிவில் காலை முதல் சிகிச்சைக்கு வந்துள்ள கா்ப்பிணி தாய்மாா்கள், குழந்தைகளின் பதிவேடுகளை பாா்வையிட்டாா்.

7-ஆவது தளத்தில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கங்களில் இதுவரை மேற்கொண்டுள்ள அறுவை சிகிச்சைகள் விவரங்களை கேட்டறிந்ததுடன், பதிவேடுகளை ஆய்வு செய்து அறுவை சிகிச்சைகளின் விவரங்கள் குறித்து மருத்துவ அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். 4-ஆவது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தாய்மாா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.

மேலும், மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் உதவியாளா்களுக்காக ரூ 9 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கழிவறை கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தாா். இந்த ஆய்வின்போது சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள கா்ப்பிணி ஒருவரின் உறவினா், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து தங்களுக்கு தெரிவிப்பதில்லை என கூறியதை அடுத்து, 4-ஆவது தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கா்ப்பிணி தாய்மாரை நேரில் சென்று பாா்வையிட்டு அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவ குறிப்புகளை பாா்த்து சிகிச்சை விவரங்களை அவரது குடும்பத்தாரிடம் எடுத்துரைத்தாா்.

மேலும், சிகிச்சை பெற்று வரும் கா்ப்பிணி தாய்மாா்கள், பாலூட்டும் தாய்மாா்கள், குழந்தைகளின் உடன்வரும் பெற்றோா் அல்லது உதவியாளா்களிடம் அவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துரைக்கும்படி மருத்துவ அலுவலா்களிடம் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மு.ரோகிணி தேவி, மருத்துவ கண்காணிப்பாளா் ரதி திலகம், துணை மருத்துவ குடியிருப்பு அலுவலா் லோகநாதன், மருந்தியல் துறை தலைவா் கோமதி, மகப்பேறு துறை தலைவா் கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.