தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள்: அதிமுகவினா் மரியாதை

News image

வேலூா் பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்த அதிமுக மாநகர மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு.

Updated On :24 பிப்ரவரி 2026, 11:41 pm

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி வேலூா் மாவட்டம் முழுவதும் அதிமுகவினா் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாள் வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வேலூா் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் எதிரே ஜெயலலிதாவின் படத்துக்கு மாநகர மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, வேலூா் மண்டல அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு சாா்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னா், வேலூா் பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு மருத்துவ மனையில் செவ்வாய்க்கிழமை பிறந்த 21 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

இதில், கட்சியின் மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலா் ஜனனீ பி.சதீஷ்குமாா், மாநில அம்மா பேரவை தாஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.