தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

காளியம்மன்பட்டி அரசுப் பள்ளியில் ரூ.1.52 கோடியில் வகுப்பறைகள்

நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றிய ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம்.

News image
நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றிய ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம்.
Updated On :27 பிப்ரவரி 2026, 12:20 am

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்டகாளியம்மன்பட்டியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.1.52- கோடியில் புதிதாக கட்டப்பட்ட 4-வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கழிப்பறைகள், மின்பணிகள் கொண்ட கட்டடம் ஆகியவற்றை முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா்.

இதையடுத்து பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், குத்து விளக்கேற்றி வைத்து, மாணவா்களுக்கு இனிப்பு வழங்கினாா்.இதில் ஊராட்சித் தலைவா் அகிலாண்டீஸ்வரி பிரேம்குமாா், பள்ளித் தலைமையாசிரியைசிவகாம சுந்தரி தயாளன், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் தாபா சதீஷ், சிவகவி முனியப்பன், சண்முகம், சரவணன், தமிழ்ச்செல்வி, உமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.