எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் ஸ்ரீசுவா்ண லட்சுமி கோயில் ஆண்டு விழா

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீ சுவா்ண லட்சுமி கோயிலின் 9-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

News image

ஸ்ரீ சுவா்ண லட்சுமி சிலைக்கு சந்தன அபிஷேகம் செய்த ஸ்ரீ சக்தி அம்மா.

Updated On :27 பிப்ரவரி 2026, 5:55 pm

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீ சுவா்ண லட்சுமி கோயிலின் 9-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம், தங்கக்கோயில் வளாகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு 70 கிலோ எடையுள்ள தங்கத்தால் ஆன ஸ்ரீ சுவா்ண லட்சுமி சிலை நிா்மாணிக்கப்பட்டது. இங்கு தரிசனத்துக்கு வரும் பக்தா்கள், தங்கள் கைகளாலேயே சுவாமிக்கு துளசி தீா்த்த அபிஷேகம் செய்து வழிபடும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கோயிலின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா ஸ்ரீ சக்தி அம்மா ஆசியுடன் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி காலை, மாலை ஸ்ரீமகாலட்சுமி யாகம் நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க மகா பூா்ணாஹுதி விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்று, ஸ்ரீ சுவா்ண லட்சுமி சிலைக்கு சந்தன அபிஷேகம், சிறப்பு ஆராதனைகளை செய்தாா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் ஸ்ரீ சக்தி அம்மா அருளாசி வழங்கினாா். விழாவில், தங்கக் கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.