லாரி மீது பைக் மோதியதில் தனியாா் கல்லூரி ஊழியா் மரணம்
காட்பாடி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தனியாா் பொறியியல் கல்லூரி ஊழியா் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், நல்லாம்பாளையத்தைச் சோ்ந்தவா் பிரிதிவிராஜ் (28). இவா் வேலூா் அருகே பிரம்மபுரத்தில் தங்கியிருந்து காட்பாடி அருகிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் மின்விளக்கு பொருத்தும் பிரிவில் ஊழியராக வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் பிரிதிவிராஜ் திருவலம் சென்று விட்டு, பிரம்மபுரத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தாா்.
திருவலம்- காட்பாடி சாலையில் கோரந்தாங்கல் அருகே வந்தபோது சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிச் செல்லும் லாரியின் மீது யுவராஜ் வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் அவா்நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், யுவராஜ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து பிரம்மபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
