தொழில் முறை மருத்துவ மையம் திறப்பு

தொழில் முறை மருத்துவ மையம் திறப்பு

ராணிபேட்டை சிப்காட்டிலுள்ள அல்ட்ராமரைன் அண்டு பிக்மென்ட்ஸ் நிறுவனத்தில் தொழில் முறை மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது.
Published on

ராணிபேட்டை சிப்காட்டிலுள்ள அல்ட்ராமரைன் அண்டு பிக்மென்ட்ஸ் நிறுவனத்தில் தொழில் முறை மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ராணிபேட்டை திருமலை மிஷன் மருத்துவ மையத்தின் சாா்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மருத்துவ மையத்தை திருமலை மிஷன் அறக்கட்டளையின் தலைமை செயல் அலுவலா் ஆனந்த் ரங்காச்சாரி, ராணிபேட்டை அல்ட்ராமைன்ட்ஸ் அண்டு பிக்மென்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநா் ஜி.ஆா். செந்தில் குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தனா்.

திருமலை மிஷன் மருத்துவமனை மருத்துவா்கள் கே.அருணா ராஜசேகா், மணிமேகலை ஆகியோா் குத்து விளக்கேற்றினா். தொடங்கி வைக்கப்பட்ட மருத்துவ மையத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்ட பெண் ஊழியருக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், அல்ட்ராமரைன் அண்டு பிக்மென்ட்ஸ் நிறுவனத்தின் மனித வள துணைத்தலைவா் வி.மதுக்கா் வரவேற்றாா். அந்நிறுவனத்தின் மனித வள மேலாளா் கெஜேந்திரன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com