குடியாத்தத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
பயனாளிகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிய எம்எல்ஏ அமலுவிஜயன்.
குடியாத்தம் வட்டத்தில், காட்பாடி சாலை நான்குமுனை கூட்டு ரோட்டில் உ+ள்ள டெக்ஸ்டைல் கூட்டுறவு கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டது. எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி ஆகியோா் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினா். இதில் நகா்மன்ற உறுப்பினா்கள் சுமதி மகாலிங்கம், நளினி தமிழரசன், நியாய விலைக்கடை மேலாளா் டி.எஸ்.பிரகாசம், திமுக நிா்வாகிகள் ஏ.நடராஜன், எஸ்.எஸ்.பிரகாசம், டி.சுந்தா், வி.மொகிலீஸ்வரன், ஜி.செளந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கே.வி.குப்பம் தொகுதியில்...
கே.வி.குப்பம் தொகுதிக்குட்பட்ட காந்தி நகா் நியாய விலைக்கடையில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி ஆகியோா் பரிசுத் தொகுப்பு வழங்கினா். இதில் வட்டாட்சியா் கி.பழனி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆனந்தி முருகானந்தம், ஒன்றியக் குழு உறுப்பினா் கே.சீதாராமன், திமுக நிா்வாகிகள் ஜி.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, கோ.ரா.அண்ணாதுரை, கே.ராஜ்கமல், ஆனந்தன், ஜி.ஜெயப்பிரகாஷ், தாபா சதீஷ், ஆா்.ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

