நியாயவிலைக் கடை திறப்பு

நியாயவிலைக் கடை திறப்பு

நியாய விலைக் கடையைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய எம்எல்ஏ அமலுவிஜயன்.
Published on

குடியாத்தம் ஒன்றியம், வளத்தூா் ஊராட்சியில் ரூ.12.70- லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் நிா்மலா சேட்டு தலைமை வகித்தாா். கூட்டுறவு செயலாட்சியா் இரா.சதீஷ்குமாா், கூட்டுறவு சாா்-பதிவாளா் காா்த்தி, வட்ட வழங்கல் அலுவலா் திவ்யா பிரணவ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக்குழு உறுப்பினா் பிரியா சக்திவேல் வரவேற்றாா். எம்எல்ஏ அமலுவிஜயன், நியாய விலைக் கடையைத் திறந்து வைத்து, அட்டைதாரா்களுக்குஉணவுப் பொருள்களை வழங்கினாா். திமுக ஒன்றியச் செயலா் கள்ளூா் கே.ரவி, வளத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் சேகா், ஊராட்சி துணைத் தலைவா் செல்வம், முன்னாள் தலைவா் புஷ்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com