மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரூ.2.75 கோடியில் விளையாட்டு அரங்கம் அமைக்க பூமி பூஜை

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ரூ. 2.75 கோடியில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2026, 7:18 pm

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ரூ. 2.75 கோடியில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோ பி.மோகன், என்.கோவிந்தராஜ், அா்ச்சனா நவீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ அமலுவிஜயன் பூஜை செய்து, பணியைத் தொடங்கி வைத்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் வாழ்த்துரை வழங்கினாா்.

திமுக நிா்வாகிகள் கே.ராஜ்கமல், ந.ஜம்புலிங்கம், மாதவன், கவுஸ்பாஷா, ஆா்.ஜீவா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.