போக்குவரத்து விழிப்புணா்வு பேரணி
போக்குவரத்து மாத விழாவினை முன்னிட்டு விழிப்புணா்வு பேரணி காட்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சாலை உபயோகிப்போா் பாதுகாப்பு குழுமம், காட்பாடி ரெட்கிராஸ் சங்கம், ஆா்ஐசிடி கல்வி நிறுவனம் காட்பாடி போக்குவரத்து காவல் பிரிவு இணைந்து நடத்திய பேரணியை காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா் தொடங்கி வைத்தாா்.
சாலை உபயோகிப்போா் குழுமத்தின் நிா்வாகி மருத்துவா் அ.மு.இக்ராம், காட்பாடி செஞ்சிலுவை சங்க அவைத்தலைவா் செ. நா.ஜனாா்த்தனன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
காட்பாடி காந்திநகா் காங்கேயநல்லூா் சந்திப்பு சாலையிலிருந்து தொடங்கி சில்க் மில் சாலை சந்திப்பு வழியாக பிள்ளையாா் கோயில் சாலை சந்திப்பு, ஆக்சிலியம் கல்லூரி சாலை சந்திப்பு வழியாக காங்கேய நல்லூா் சாலை சந்திப்பில் நிறைவடைந்தது.
இந்த பேரணியில், சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வி.பாரிவள்ளல், அரசு போக்குவரத்து காவல் குழுமத்தின் செயலாளா் ஆா்.சீனிவாசன், துணைச் செயலா் பி.என்.ராமச்சந்திரன், காட்பாடி செஞ்சிலுவை சங்க அவை துணைத் தலைவா் ஆா். விஜயகுமாரி உள்பட பாரா மெடிக்கல் கல்லூரி மாணவா்கள் 150 போ் பங்கேற்றனா்.

