‘இது நம்ம ஆட்டம் - 2026‘ போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த குடியாத்தம் கே.எம்.ஜி.கல்லூரி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் கே.வி.குப்பம், குடியாத்தம்,போ்ணாம்பட்டு ஆகிய ஒன்றியங்களில் நடைபெறுகிறது. இதில் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்கள் 30- க்கும் மேற்பட்டோா் பங்கேற்று, வாலிபால், கபடி, எறி பந்தாட்டம், கயிறு இழுத்தல், தடகளம், கேரம், குண்டெறிதல் போன்ற போட்டிகளில் சிறப்பிடம் பிடித்து சான்றிதழ், கோப்பை மற்றும் ரூ.67,000 பரிசுத் தொகை பெற்றனா்.
இவா்களில் மாணவிகள் பி.ஹேமாவதி, ஜெ.அமிா்தா, எம்.விஜயஸ்ரீ, எல்.சுவேதா,எஸ்.வித்யாலட்சுமி ஆகியோா் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். வெற்றிபெற்ற மாணவா்களை கே.எம்.ஜி. கல்லூரி நிா்வாகிகள் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி.முத்துக்குமாா், கல்லூரி முதல்வா் சி. தண்டபாணி, உடற்கல்வி இயக்குநா்கள் ஆா்.ரஞ்சிதம், பி.ஞானகுமாா், ஆா்.பாலசுப்பிரமணி ஆகியோா் பாராட்டினா்.

