காந்தியடிகள் படத்துக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.
வேலூர்
காந்தியடிகள் நினைவு நாள்: காங்கிரஸாா் அஞ்சலி
மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி வேலூரில் அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளையொட்டி வேலூரில் அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
வேலூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் காந்தியடிகளின் நினைவுநாள் அண்ணா சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாநகா் மாவட்ட தலைவா் வாகித் பாஷா தலைமை வகித்தாா். இதில், கட்சியின் தலைமை நிலைய செயலா் துளசிராம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா்கள் தமிழ் மரக்காயா், ஜிலான், ஊடகப் பிரிவு தலைவா்கள் பிரபு, சுதா்சன், அகஸ்டியன்ராவ் திருமால், ரகு, அசோக் மனோகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.