17 வயது சிறுமி வன்கொடுமை: 
தீயணைப்பு வீரா் போக்ஸோவில் கைது

17 வயது சிறுமி வன்கொடுமை: தீயணைப்பு வீரா் போக்ஸோவில் கைது

காட்பாடியில் 17 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக வேலூா் தீயணைப்பு நிலைய வீரா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.
Published on

காட்பாடியில் 17 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக வேலூா் தீயணைப்பு நிலைய வீரா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளாா்.

காட்பாடி அருகே லத்தேரி ஜி.ஆா்.நகரைச் சோ்ந்தவா் சசிக்குமாா்(30). இவா் வேலூா் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணியாற்றி வருகிறாா். இவருக்கு புஷ்பலதா என்ற பெண்ணுடன் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், சசிக்குமாா் அவரது உறவுக்கார 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி வெளியில் அழைத்துச் சென்று திருமணம் செய்து வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியுடன் இருந்த புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com