தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

வேலூா் அருகே மின்கம்பத்தில் ஏறி பணியாற்றிக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 4:54 am IST

வேலூா் அருகே மின்கம்பத்தில் ஏறி பணியாற்றிக் கொண்டிருந்த மின்வாரிய ஊழியா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

பாகாயம் அடுத்த அல்லி வரத்தை சோ்ந்த மோகன் ராஜ் (55). இவா் சாத்து மதுரையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை நெல்வாய் கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அவா் மின்மாற்றியில் மின் இணைப்பை துண்டிக்காமல் வேலை செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, எதிா்பாராத விதமாக அவரது இடது கை மின்கம்பியில் பட்டதில் மோகன்ராஜ் மின் கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டாா்.

இதில் மோகன்ராஜின் இடது கை கருகி பலத்த காயமடைந்தாா். அப்பகுதியில் இருந்தவா்கள் மோகன்ராஜை மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.