தமிழகத்தில் விற்பனையாகும் அனைத்து கணினிகளிலும் தமிழ் மென்பொருள் இருக்க வேண்டும்: மு.ஆனந்தகிருஷ்ணன் வேண்டுகோள்

கோவை, ஜூன் 26: தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்துக் கணினிகளிலும் தமிழ் மென்பொருள் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, தமிழ் இணைய மாநாட்டுக் குழுத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் வேண

கோவை, ஜூன் 26: தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் அனைத்துக் கணினிகளிலும் தமிழ் மென்பொருள் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, தமிழ் இணைய மாநாட்டுக் குழுத் தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.

÷தமிழ் இணைய மாநாட்டை முன்னிட்டு, தமிழகமெங்கும் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிலும் மாணவ மாணவியருக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

÷இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார். விழாவில் தமிழ் இணைய மாநாட்டுக் குழுத் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பேசியது:

÷சீனாவிலும், கொரிய நாடுகளிலும் விற்பனை செய்யப்படும் கணினிகளில் அந்தந்த நாடுகளின் மொழி மென்பொருள் இருக்குமாறு அந்நாட்டினர் பார்த்துக் கொள்கின்றனர். சீன, கொரிய மொழிகளின் மென்பொருள் இல்லாத கணினிகளை அந்நாடுகளில் விற்பனை செய்யத் தடை இருக்கிறது. அதே போல், தமிழகத்திலும் தமிழ் மென்பொருள் உள்ள கணினிகளையே விற்பனை செய்ய வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட வேண்டும்.

÷செயல்முறைக் கல்வியை கற்பிப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. பள்ளி மாணவர்களுக்கு கணினிப் பயிற்சி கொடுக்கும அதே வேளையில், அவர்களுக்கு சமூக சேவை மீதான ஆர்வத்தையும் கணினி வழியில் தூண்ட வேண்டும்.

÷ஒவ்வோர் ஆண்டும் உயர்கல்வி மாணவர்களால் ஒரு லட்சம் ஆய்வுக் கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் 10 ஆயிரம் ஆய்வுகளாவது கணினித்தமிழ் தொடர்பாக இருந்தால், தமிழ் முன்னேற்றம் அடையும்.

÷செம்மொழி உயராய்வு மத்திய நிறுவன அலுவலகம் இனி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் செயல்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.  செம்மொழித் தமிழும், இணையத் தமிழும் இணைந்து மேம்பட வேண்டும் என்பதே இப்போது நடக்கும் மாநாட்டின் நோக்கம். எனவே, புதிய செம்மொழி உயராய்வு அலுவலகத்தில் இணையத் தமிழுக்கான முழுநேர செயலகத்தை முதல்வர் உருவாக்கித் தர வேண்டும், என்றார்.

÷இணைய மாநாட்டையொட்டி நடத்தப்பட்ட, 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கான தனிநபர் தூரிகை வரைவுப் போட்டியில், காஞ்சிபுரம் எஸ்ஆர்கேஎம்வி பள்ளி மாணவர் டி.நந்தகுமார் முதல் பரிசை வென்றார். 2-வது பரிசு, நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவர் ஏ.சவுந்தருக்கும், 3-வது பரிசு, மதுரை சிவகாசி நாடார் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி ஜே.லாவண்யாவுக்கும் கிடைத்தன.

÷பள்ளி மாணவர்களுக்கான குழு வரைகலை போட்டி: முதல் பரிசு - என்.மணிகண்டன், ஆர்.பாலசுப்பிரமணி (புதுக்கோட்டை செயின்ட் மேரிஸ் பள்ளி), 2-வது பரிசு - எம்.விவேக் குமார், எஸ்.திலக் (சேலம் சாரதா பாலமந்திர் பள்ளி), 3-வது பரிசு - கெüதம், விவேக்ராஜ் (நாமக்கல் எஸ்எஸ்எம் லட்சுமியம்மாள் பள்ளி).

÷கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கான கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் விவரம்:

÷கலை அறிவியல்: முதல் பரிசு - யோகேஷ், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம், 2-வது பரிசு - பிரேமலதா சாந்தி, புதுச்சேரி, 3-வது -  எஸ்.நீலமேகன், சென்னை பல்கலைக்கழகம்.

÷தொழில்நுட்பம்: முதல் பரிசு - நவீன்குமார், 2-வது பரிசு - பி.ருத்ரன், (இருவரும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம்), 3-வது - தங்கராஜா, செயின்ட் சேவியர்ஸ் கல்வியியல் கல்லூரி.

÷உயிரியல்: முதல் பரிசு - எம்.ராஜா பிரியங்கா மேரி (தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்), 2-வது - இந்துமதி (டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம்), 3-வது - மொஹிதீன் பாஷா (தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com