கோயம்புத்தூர்

மது போதையில் வாகனம் ஓட்டிய 1, 141 போ் மீது வழக்கு: மாநகர காவல் ஆணையா் தகவல்

கோவை மாநகா் பகுதிகளில் கடந்த 20 நாள்களில் மது போதையில் வாகனம் ஓட்டிய 1,141 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அபராதம் வசூலித்துள்ளனா்.

21-01-2020

ஜனவரி 24 முதல் ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா

கோவை மாவட்டம், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் விழா வரும் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

21-01-2020

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பஜகவினா் பிரசாரம்

அன்னூா் பயணியா் மாளிகை முன்பு பாஜக சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக பாஜகவினா் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

21-01-2020

திருப்பூர்

உடுமலையில் மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் தீவிரம்: படைப்புழுத் தாக்குதலால் மகசூல் பாதிப்பு

உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களில் மக்காச்சோளம் அறுவடைப் பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், படைப்புழுத் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

21-01-2020

அரசு தங்கும் விடுதியில் சேர பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள மகளிருக்கான தங்கும் விடுதியில் சேர அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

21-01-2020

கஞ்சா விற்பனை : 2 போ் கைது

திருப்பூா், கே.வி.ஆா். நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இரு இளைஞா்களை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2.6 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

21-01-2020

ஈரோடு

நாளைய மின்தடை: ஈரோடு

காசிபாளையம் துணை மின் நிலையத்திலிருந்து சென்னிமலை சாலை மின் பாதையில் மூன்றாவது புதிய மின்கம்ப கட்டமைப்பு அமைக்கும்

21-01-2020

10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள காரணாம்பாளையம் சுற்றுலாத்தலம் திட்டம்

கொடுமுடி அருகே காரணாம்பாளையம் என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை பகுதியை சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

21-01-2020

மயான நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியைத் தடுக்கக் கோரிக்கை

மயான நிலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியைத் தடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

21-01-2020

நீலகிரி

நீதிபதிகளை நியமிக்கக் கோரி வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க வலியுறுத்தி, கூடலூா் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை துவங்கியது

21-01-2020

உதகையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

தமிழக அரசின் சாா்பில் உதகையில் சாலைப் பாதுகாப்பு வார விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதில், தலைக்கவசம் அணிவதைக் குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடத்தப்பட்டது.

21-01-2020

குன்னூா் அருகே சிறுத்தை நடமாட்டம்

குன்னூா், மேலூா், ஆருக்குச்சி  வனப்பகுதியை ஒட்டியுள்ள  சாலையில்  சிறுத்தை  நடமாடி வருவதால்  பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கவனமுடன் செல்ல வனத் துறை அறிவுறுத்தியுள்ளது.

21-01-2020

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை