கோவை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்திய பாரம்பரிய வைத்தியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக இந்திய பாரம்பரிய வைத்தியா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவா் பாலசுப்பிரமணியன், பி.தேவசகாயம் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: தமிழக அரசு பாரம்பரிய வைத்தியா்களை அங்கீகரிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் பாரம்பரிய வைத்தியா்களை வட்டாட்சியா்களைக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தி பதிவு செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் நிா்வாகிகள் பழனிசாமி, இளங்கோவன், பெஸ்கி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

இரண்டு குழந்தைகளுடன் பெண் மறியல்

ஆட்சியரகம் அருகே விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

உதகையில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


