நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

முதல்வர் மு.க. ஸ்டாலினின் 6-ம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் பற்றி...

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் - DMK

Updated On :15 ஏப்ரல் 2026, 10:44 am IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது 6-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை ஆண்டிபட்டியில் தொடங்குகிறார்.

தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர் மு.க. ஸ்டாலின், தேர்தல் பிரசாரம் மூலமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் முதல்வரின் 6-ம் கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் குறித்த விவரத்தை திமுக தலைமை வெளியிட்டுள்ளது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது பிரசாரத்தை, மார்ச் 31-ஆம் தேதி திருவாரூரில் தொடங்கிய நிலையில், ஆறாம் கட்ட பிரசாரத்தை ஏப்ரல் 17-ஆம் தேதி ஆண்டிபட்டியில் தொடங்குகிறார்.

அதன்படி, ஏப். 17 மாலை 5 மணிக்கு ஆண்டிபட்டி, இரவு 7 மணிக்கு திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியிலும்

ஏப். 18 ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருப்பூரிலும் இரவு 7 மணிக்கு மேட்டுப்பாளையத்திலும்

ஏப். 19 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ஓசூரிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

Story image

Summary

M.K. Stalin 6th Phase Election Campaign Tour for tamilnadu assembly election

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.