சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், யாரும் எதிர்பார்த்திராத வகையில், வெறும் 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
அதிர்ச்சியளிக்கும் விதமாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், அவர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் தோல்வியடைந்தார்.
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ளது.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
திமுகவின் தோல்விக்கான காரணங்கள், தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட குழுவுடன் ஆலோசனை செய்து வருகிறார்.
முன்னதாக, தோல்வி தொடர்பாக திமுகவினரிடம் கருத்துக்கேட்பதற்காக 'உடன்பிறப்பின் குரல்' என்ற புதிய வலைதளப் பக்கத்தை ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
DMK Leader MK stalin discussion with team reg election results
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்துக்கு எந்த நேரத்திலும் தோ்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்

ஆளுங்கட்சி மிரட்டலுக்கு அஞ்சும் இயக்கம் திமுக அல்ல: மு.க. ஸ்டாலின்

மு.க. ஸ்டாலின் அப்படி சொல்லியிருக்கக் கூடாது: அமைச்சர் ராஜ்மோகன்
இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



