தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்பதாக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, எதிர்க்கட்சியாகச் செயல்படுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, "சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு நான் யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. கட்சி நிர்வாகிகள் மாறிமாறி குறைசொல்லிக் கொண்டிருந்தால் அதற்கு முடிவு என்பதே இருக்காது.
கழகத்தின் தலைவர் என்ற முறையில் இந்தத் தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன். இதுதான் நிதர்சனம்.
என்னைப் பொருத்தவரையில், கடந்த 5 ஆண்டுகாலமும் என் சக்திக்கு மீறி கடுமையாக உழைத்தேன். உங்களையும் ஓய்வில்லாமல் உழைக்க வைத்தேன்.
இதுவரையில் எந்த அரசும் செய்திராத சாதனைகளை நாம் செய்து கொடுத்தோம். கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடிப் பயன் தரும் ஆட்சியாக இருந்த நம் ஆட்சி இருந்தது. இது மக்களுக்கும் தெரியும்.
பொது வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், அது சகஜம். அதுதான் அரசியல். இந்தப் பக்குவம் மற்றவர்களைவிட நமக்குதான் அதிகம்.
அதனால்தான், மற்ற கட்சிகளைப்போல எம்எல்ஏ-க்களை நட்சத்திர விடுதிகளில் ஒளித்து வைக்கவேண்டிய பயமில்லாமல், தோல்வியிலும் தைரியமாக இருந்தோம்.
ஆனால், இப்போது இப்படி ஒரு கட்சிக்கு வாக்களித்து ஆட்சியமைக்க விட்டோமே என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிடுவதைப் பார்க்கிறோம். இதுதான் நம் ஐந்தாண்டு கால நல்லாட்சிக்குக் கிடைத்த அங்கீகாரம்.
என்ன ஆனாலும் சரி, சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் இங்கு எதுவுமே நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமல்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும்கூட.
எங்கே கோளாறு ஏற்பட்டது? எங்கே மெத்தனம் ஏற்பட்டது? என்பதுதான் முக்கியம். ஆகையால், என்னால் அமைக்கப்படும் விசாரணைக் குழுவானது, இணையதளம் மூலமாக தொண்டர்களும் மக்களும் வழங்கும் ஆலோசனைகளை வைத்து திமுகவின் அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்யவுள்ளேன்" என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
Summary
M.K. Stalin takes responsibility for DMK's defeat in the Assembly elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய்க்கு ஆலோசனைகள் வழங்கினேன்: மு.க. ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவர் யார்? திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!

மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
