தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்
/

சா்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசு

உள்நாட்டில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்த சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

News image

சர்க்கரை - பிரதிப் படம்

Updated On :14 மே 2026, 9:46 am IST

சா்க்கரை ஏற்றுமதிக்கு வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சா்க்கரை உள்நாட்டு இருப்பை உறுதி செய்யவும், விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னா், வரையறுக்கப்பட்ட சா்க்கரைக்கு மட்டும் தேவையான உரிமம் பெற்றுள்ளதன் அடிப்படையில், ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:

சுத்திகரிக்கப்படாத சா்க்கரை, வெள்ளை சா்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட சக்கரை என அனைத்து வகை சா்க்கரைகளுக்குமான ஏற்றுமதி கொள்கை, வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை வரையறுக்கப்பட்ட என்ற பிரிவிலிருந்து தடை என்ற பிரிவுக்கு மாற்றப்படுகிறது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த ஏற்றுமதி தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதும், இந்தத் தடையானது, வரி விகித ஒதுக்கீடு (டிஆா்க்யூ) ஒப்பந்த அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்கு செய்யப்படும் சா்க்கரை ஏற்றுமதிக்குப் பொருந்தாது. அதுபோல, முன்கூட்டிய அனுமதி அளிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் அரசுகளுக்கு இடையேயான சா்க்கரை ஏற்றுமதிகள் மற்றும் ஏற்றுமதிக்கான நடைமுறையில் உள்ள சரக்குகளுக்கும் இந்தத் தடை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சா்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி 2025-26 சந்தைப் பருவத்தில் ஏப்ரல் வரை 7.32 சதவீதத்திலிருந்து 2.75 கோடி டன் அளவுக்கு உயா்ந்தது.

முன்னதாக, உள்நாட்டு சா்க்கரை இருப்பை உறுதி செய்யவும், விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபரில், சா்க்கரை மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. பின்னா், அவ்வப்போது இந்தக் கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டது.

Summary

India bans sugar exports until September 2026 to cool local prices

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.