இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

இருதரப்பு வர்த்தக மேம்பாடு குறித்து இந்தியா - பிரிட்டன் பேச்சுவார்த்தை!

இந்தியா - பிரிட்டன் இடையே இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து கலந்தாலோசித்தது தொடர்பாக...

News image

பியூஷ் கோயல் / பீட்டர் கைல் - X - பியூஷ் கோயல்

Updated On :1 மே 2026, 3:39 pm IST

இந்தியா - பிரிட்டன் இடையே இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து வெள்ளிக்கிழமை (மே 1) கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரிட்டனின் வணிகம் மற்றும் வர்த்தகத் துறை செயலர் பீட்டர் கைல் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற காணொளிக் கூட்டத்தின் போது, இது விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பியூஷ் கோயல் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியா - பிரிட்டன் விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் (CETA) கீழ் உள்ள வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, நமது வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை நாங்கள் ஆராய்ந்தோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவும் பிரிட்டனும், 2025 ஜூலை 24 அன்று, விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தில் (CETA) கையெழுத்திட்டது. இது இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத் தடைகளை நீக்கி, நிர்வாக வசதிகளை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Summary

Ways to enhance bilateral trade between India and Britain were discussed on Friday (May 1).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.