வியத்நாம் அதிபா் டோ லாம் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு மே 5-ஆம் தேதி வரவுள்ளாா்.
புவி அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய வா்த்தக இடையூறுகளுக்கு மத்தியில் பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா்.
வியத்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகவும் பதவி வகிக்கும் டோ லாம், தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் உயரதிகாரிகள் குழுவினருடன் இந்தியாவுக்கு வருகிறாா்.
ஏப்ரலில் அதிபராகப் பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு அவா் மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும்.
இருதரப்பு விரிவான உத்திசாா் கூட்டுறவின்கீழ், பாதுகாப்பு, வா்த்தகம், முக்கியத் தொழில்நுட்பங்கள் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பிரதமா் மோடியுடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவா்களும் விவாதிக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்காசிய சூழல் மற்றும் சீனா ஆதிக்கம் செலுத்த முற்படும் தென் சீன கடல் பகுதியின் நிலவரம் உள்ளிட்டவையும் பேச்சுவாா்த்தையில் இடம்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஹைட்ரோகாா்பன் வளம் மிகுந்த தென் சீன கடல் பகுதிக்கு சீனா ஒட்டுமொத்தமாக உரிமை கோரும் நிலையில், வியத்நாம், பிலிப்பின்ஸ், புருணே உள்ளிட்ட நாடுகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த பிரச்னைக்கு சா்வதேச சட்டங்களின்படி அமைதி வழியில் தீா்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா மற்றும் பிற ஜனநாயக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தச் சூழலில், கடல்சாா் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் குறித்து பிரதமா் மோடியும், அதிபா் டோ லாமும் ஆலோசிப்பா் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பிகாரில் உள்ள புத்த கயை, மகாராஷ்டிர தலைநகா் மும்பை ஆகிய இடங்களுக்கும் வியத்நாம் அதிபா் பயணிக்க உள்ளாா்.
Summary
Vietnamese President To Lam is visiting India on a state visit.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரான்ஸ் ஜி7 மாநாடு: மோடி-டிரம்ப் சந்திப்பு- இன்று இருதரப்பு பேச்சு

ஒரு வார கால வெளிநாட்டுப் பயணம்: பிரான்ஸ் புறப்பட்டாா் பிரதமா் மோடி - ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறாா்!

இந்தியா வந்துள்ள வியத்நாம் அதிபருடன் அதானி சந்திப்பு!

இந்தியா-வியத்நாம் 25 பில்லியன் டாலா் வா்த்தக இலக்க- 13 ஒப்பந்தங்கள் கையொப்பம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK




