/
வியத்நாமின் புதிய அதிபராக, அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டோ லாம் (68) பதவியேற்றுள்ளாா்.
புதிய அதிபா் தோ்வுக்காக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 495 உறுப்பினா்களும் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதன் மூலம், கட்சியின் தலைமைப் பொறுப்பு மற்றும் நாட்டின் உயரிய அரசுப் பதவி ஆகிய இரண்டையும் வகிக்கும் மிக வலிமையான தலைவராக டோ லாம் உருவெடுத்துள்ளாா்.
வளா்ச்சிக்கு உறுதி: அதிபரான பிறகு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், வியத்நாமை ஒரு புதிய வளா்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லப்போவதாக டோ லாம் சூளுரைத்தாா்.
புதிய பிரதமா் நியமனம்: நிா்வாக ரீதியிலான மாற்றங்களின் ஒரு பகுதியாக, வியத்நாம் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநா் லே மின் ஹங் (55), நாட்டின் புதிய பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
தொடர்புடையது

இந்தியா-வியத்நாம் 25 பில்லியன் டாலா் வா்த்தக இலக்க- 13 ஒப்பந்தங்கள் கையொப்பம்

மேற்கு வங்கம்: மே 9ல் புதிய பாஜக அரசு பதவியேற்பு!

வியத்நாம் அதிபா் மே 5-இல் இந்தியா வருகை: பிரதமா் மோடியுடன் இருதரப்பு பேச்சு

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



