உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் கையெழுத்து! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!

இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து...

India-New Zealand FTA signed

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து - PTI

Published On :

இந்தியா - நியூஸிலாந்து இடையே இன்று தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தகம் ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலும் நியூஸி. வர்த்தகத் துறை அமைச்சர் டாட் மெக்லேவும் கையெழுத்திட்டனர்.

வேளாண்மை, ஜவுளி, மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வணிகச் சேவைகள், கல்வி, கட்டுமானம், சுகாதாரம் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்கீழ், சுமார் 8,000-க்கும் மேற்பட்ட இந்திய பொருள்களை எந்தவொரு கூடுதல் வரியுமின்றி, நியூஸிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா-நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து - PTI

2025 மார்ச்சில் தொடங்கப்பட்ட இந்த வர்த்தகப் பேச்சுவார்த்தை 9 மாதங்களிலேயே டிசம்பரில் முடிக்கப்பட்டது. இந்தியாவின் மிக வேகமான வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின்கீழ், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருள்கள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் உள்ளிட்ட சுமார் 8,284 பொருள்களுக்கும் நியூஸிலாந்தில் 100 சதவிகித வரி விலக்கு அளிக்கப்படும். அதேபோல், நியூசிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வரும் கம்பளி, மரம், நிலக்கரி, பழங்கள் மீதான வரிகள் குறைக்கப்படும்.

இருப்பினும், இந்திய விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு பால் பொருட்கள், வெங்காயம், பருப்பு வகைகள், சர்க்கரை போன்ற உணர்திறன் மிக்க துறைகளுக்கு வரிவிலக்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தில் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை, சுகாதாரம் மற்றும் கட்டுமானத் துறை சார்ந்த 5,000 நிபுணர்களுக்கு விசா முன்னுரிமையும் வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யவும் நியூஸி. உறுதியளித்துள்ளது.

தற்போது 1.3 பில்லியன் டாலராக இருக்கும் இருதரப்பு வர்த்தகத்தை, அடுத்த ஐந்தாண்டுகளில் 5 பில்லியன் டாலராக உயர்த்த இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளன.

Summary

India - New Zealand FTA signed: Top points to know about trade deal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.