கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!

21 வயதுக்குக் கீழ் உள்ளோருக்கு மது விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை

Tasmac

மது - கோப்புப் படம்

Published On :

21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசு, பொறுப்பேற்றவுடனேயே மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.

இந்த நிலையில், 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதனை மீறுவோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

சிறார்களிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகமிருந்தால், அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதேனும் உரிய ஆவணங்களைச் சரிபார்த்து மது விற்பனை செய்யப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2023இன்படி, 21 வயதுக்குள்பட்டோருக்கு மது விற்பனை செய்யத் தடை இருந்த நிலையில், அதனைத் தற்போது கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Summary

TASMAC administration issues warning: Alcohol must not be sold to individuals under the age of 21

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.