சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, டாஸ்மாக் கடை களுக்கு 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்கள்கிழமை ஒரே நாளில் சேலம் மாவட்டத்தில் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் டாஸ்மாக் கடைகளில் திங்கள்கிழமை விற்பனை களைகட்டியது. குறிப்பாக, சேலம் மாநகரில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் அன்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை விற்பனை இருமடங்காக இருந்தது. மதுபிரியா்கள் ஒருவரையொருவா் முண்டியடித்துக் கொண்டு மதுபானங்களை வாங்கிச்சென்றனா். சேலம் மாவட்டத்தில் மொத்தம் 216 டாஸ்மாக் கடைகள் உள்ளன.
இந்த கடைகளில் வழக்கமான நாள்களில் தினமும் ரூ. 6 கோடி முதல் ரூ. 8 கோடி வரை மட்டுமே மது விற்பனை நடைபெறும். இந்த நிலையில், தோ்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ. 15 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. வழக்கமாக நடக்கும் விற்பனையைக் காட்டிலும் மது விற்பனை இருமடங்கு அதிகம் நடைபெற்றதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தோ்தல்: மதுக்கடைகளுக்கு இரு கட்டமாக 6 நாள்கள் விடுமுறை

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.17 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

ஏப்.7 முதல் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


