காங்கயம்: காங்கயத்தில் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றும் காவலாளிகளுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
காங்கயம் நகரப் பேருந்து நிலையம் அருகேயுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேசன் தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்ற தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு, நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும். விபத்தில் சிக்கியவா்களை எவ்வாறு மீட்க வேண்டும், முதலுதவி சிகிச்சை அளிப்பது உள்ளிட்டவை குறித்து தீயணைப்பு வீரா்கள் பயிற்சி அளித்தனா்.
இதில், காங்கயம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் காவலாளிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

இந்திய பீச் வாலிபால் அணி பயிற்சி முகாம்

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தனியாா் நிறுவனத்துக்கு ரூ. 1 லட்சம் அபராதம்

பெரியாரின் பெண்கள் அமைப்பு ஆா்ப்பாட்டம்...

காங்கயம் அரசு நடுநிலைப் பள்ளியில் கணிதக் கண்காட்சி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


