பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

தவெக பிரசாரத்தில் மயங்கிய திருப்பூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!

திருப்பூரில் நடைபெற்ற தவெக பிரசாரத்தில் வேட்பாளர், 7 பெண்கள் உள்பட 9 பேர் மயக்கம் அடைந்தனர்.

News image

மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட மயக்கமடைந்த பெண் / தவெக பிரசாரம் - எக்ஸ்

Updated On :14 ஏப்ரல் 2026, 4:22 pm IST

திருப்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசாரத்தில் வேட்பாளர், 7 பெண்கள் உள்பட 9 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப். 14) பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் மேற்கொள்கிறார்.

கடும் நிபந்தனைகளுடன் விஜய் சாலைவலம் மற்றும் பிரசாரத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சேலம் 6 வழிச்சாலை வழியாக திருப்பூருக்கு பிரசார வாகனத்தில் விஜய் சென்றுக்கொண்டிருந்தார்.

பெருமாநல்லூரில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் காலை முதலே விஜய்யைக் காண்பதற்காக காத்திருந்தனர். விஜய் வருகைக்காக சாலைகளில் கூடியிருந்த மக்களுக்காக தவெக சார்பில் தண்ணீர், குளிர்பானங்கள் கொடுக்கப்பட்டு வந்தது.

எனினும் வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், பெண்கள் சிலர் அடுத்தடுத்து மயங்கினர்.

கோவை சூலூர் தொகுதி வேட்பாளர் சுகுமார், கணியூர் சுங்கச்சாவடியில் விஜய்யை வரவேற்றபோது கடும் வெய்யிலால் மயக்கம் அடைந்தார். அவரை தவெக ஆதரவாளர்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.

இதனிடையே திருப்பூரில் விஜய் வருகைக்காக காத்திருந்தவர்களில் 7 பெண்கள், ஒரு ஆண், வேட்பாளர் சுகுமார் என 9 பேர் மயங்கியுள்ளனர். மயங்கியவர்களுக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பிரசாரத்துக்கு குழந்தைகளுடன் வர வேண்டாம் என தவெக சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தும் கடும் வெய்யிலில் குழந்தைகளுடன் பெண்கள் பலர் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Tiruppur Candidate Faints During TVK Campaign! 7 Women Also Collapse

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.