திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!பெரியார் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதைதிருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா! எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி குறித்து...

News image

அர்ச்சனா பட்நாயக் - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 7:17 pm IST

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை ஏற்பாட்டு முறை (EMS) வாயிலாக வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளை சமவாய்ப்பு முறையில் ஒதுக்கீடு செய்வதற்காக, தேர்தல் நடத்தும் அலுவலர் வாயிலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் இரண்டாம் நிலை சமவாய்ப்புக்கு உட்படுத்தப்படுகிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளை இரண்டாம் நிலை சமவாய்ப்புக்குட்படுத்துதல் குறித்த விரிவான அறிவுறுத்தல்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் https://www.eci.gov.in/evm-vvpat என்ற வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளை இரண்டாம் நிலை சமவாய்ப்புக்குட்படுத்துதல் ஏப். 11 முதல் ஏப். 16 வரையிலும், வேட்பாளரின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பதிவேற்றமானது ஏப். 16 முதல் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்தச் செயல்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெறும். வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளின் மற்றும் இருப்புக்காப்பிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளின் பட்டியல்கள் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பகிரப்படும்.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகள் மட்டுமே, வாக்குப்பதிவு நாளன்று, ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Summary

Chief Electoral Officer Archana Patnaik has announced that the process of affixing candidates' names and symbols to the electronic voting machines will commence on the 16th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.