நாட்டில் புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. புதுச்சேரியில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வழக்கம் போலவே காலை 7 மணிக்குத் தொடங்கி இடைநில்லாமல் மாலை 6 மணி வரை வாக்குகள் பதிவு செய்யப்படும். நாளைய தேர்தலில் 30 தொகுதிகளில் சுமார் 9 லட்சம் பேர் வாக்களிக்கவிருக்கிறார்கள்.
மதிய நேரத்தில் வெய்யில் கடுமையாக இருக்கும் என்பதால், பொதுவாக மக்கள் காலையிலேயே வாக்களிக்க அதிகம் வருவார்கள். எனவே, வரிசை அதிகமாக இருக்கும் என்பதால், வாக்குப்பதிவு தொடங்கியதுமே மக்கள் வாக்களிக்க வந்தால், நீண்ட வரிசையைத் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.
வாக்களிக்கும் வாக்குச்சாவடியை அறிந்துகொள்ள தேர்தல் ஆணையம் பல வசதிகளை செய்துள்ளது. வாக்காளர் சேவை இணையதளம் அல்லது செயலிகள் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.
வாக்காளர் அடையாள அட்டையும், வாக்குச்சாவடி விவரக் குறிப்பும் கையில் எடுத்துக் கொள்வது குழப்பங்களைத் தவிர்க்க உதவும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் வேறு ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம்.
நீங்கள் வாக்களிக்கவிருக்கும் வேட்பாளரின் பெயர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எங்கே இருக்கிறது என்பதை, முன்கூட்டியே தெரிந்துகொண்டு செல்வது நல்லது. அது பற்றி வாக்குச்சாவடியில் விவரமாக வெளியிடப்பட்டிருக்கும்.
வாக்களித்ததும் அருகில் உள்ள விவிபேடில் நீங்கள் வாக்களித்த கட்சியின் சின்னம் காட்டப்படுகிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
புதுச்சேரியில் அனைவரும் வாக்களிக்க வசதியாக, அனைத்து அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படும்.
புதுவையில் அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவை நடத்தத் தேவையான அனைத்து பொருள்களும் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு, அந்தந்த வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி, புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.
புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 1,099 வாக்குச்சாவடிகளுக்கு 78 பறக்கும் படைகள், 40 நிலையான கண்காணிப்புக்குழுக்கள், 50 விடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பணியில் 4116 அரசு துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர். பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ள 137 இடங்களில் 155 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று காலை முதல் அந்தந்த வாக்கு மையங்களுக்கு பேருந்துகள் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விவிபேட் இயந்திரங்கள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளது.
Summary
Puducherry Election! Know about polling start time, polling booths!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாளை வாக்குப்பதிவு! புதுவை வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

வாக்குப்பதிவு - ஜனநாயகக் கடமை!

தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!

கடலூா் மாவட்டத்தில் உள்ள 2,590 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு: மாவட்டத் தோ்தல் அலுவலா்
வீடியோக்கள்
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை


