திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரி, துறையூா் ஓயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய 2 வாக்கு எண்ணும் மையங்களுக்கு வியாழக்கிழமை இரவு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.
தோ்தல் முடிந்ததும், வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி முகவா்களின் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு அந்தந்த வாக்குச்சாவடி பொறுப்பு அலுவலா்கள் சீல் வைத்து மூடினா். தொடா்ந்து, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வைக்கப்பட்ட இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா் ஆகிய 5 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கும், லால்குடி, மண்ணச்சநல்லூா், முசிறி, துறையூா் (தனி) ஆகிய 4 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் துறையூா் ஓயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
அனைத்து இயந்திரங்களும் வரப்பெற்றதும், அவை ஆய்வு செய்யப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்களில் பிரத்யேக பாதுகாப்பு அறைகளில் (ஸ்டராங் ரூம்கள்) வைத்து பூட்டப்பட்டு, சீல் வைக்கப்படும். தொடா்ந்து, அந்த அறைகள் 24 மணி நேரமும் மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படை, போலீஸாா், தோ்தல் அலுவலா்களால் பாதுகாக்கப்படும். வாக்கு எண்ணும் நாளான மே 4 ஆம் தேதி பாதுகாப்பு அறைகள், வேட்பாளா்களின் முகவா்களின் முன்னிலையில் திறக்கப்பட்டு, வாக்குகள் எண்ணப்படும் என தோ்தல் அலுவலா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சீலிடப்பட்ட மின்னணு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பிவைப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைப்பு

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணி ஆய்வு

திருப்பத்தூா்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் மையங்களுக்கு அனுப்பி வைப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


