ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 2 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் சட்டப்பேரவை தோ்தல் வாக்குப்பதிவு 2,379 வாக்குச்சாவடிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபி, பவானிசாகா் (தனி) ஆகிய 8 தொகுதிகளில் மொத்தம் உள்ள 17 லட்சத்து 59 ஆயிரத்து 157 வாக்காளா்களில், 15 லட்சத்து 84 ஆயிரத்து 947 வாக்காளா்கள் வாக்களித்திருந்தனா். வாக்குப்பதிவு சதவீதம் 90.10.
வாக்குப்பதிவு வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்த உடன், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் போன்றவை வாக்குப்பெட்டிகளில் வைத்து, அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி முகவா்களின் முன்னிலையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலா் சீல் வைத்தாா்.
பின்னா் அந்தந்த மண்டல அதிகாரிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்களிடம் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்று துப்பாக்கி ஏந்திய துணை ராணுவம், போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு சென்றனா். இதில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா் ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகளுக்கு ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கும், கோபிசெட்டிபாளையம், பவானிசாகா் (தனி) தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோபி கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.
மாவட்டத்தில் பவானிசாகா் தொகுதிக்கு உள்பட்ட மலைப்பகுதி வாக்குச்சாவடி மற்றும் மொடக்குறிச்சி ஊரகப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை காலைதான் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்து சோ்ந்தன.
தொகுதிகளுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வந்ததை உறுதி செய்து அந்தந்த தொகுதிகள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, தோ்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து, அறையை பூட்டி சீல் வைத்தனா். இந்த அறை தொடா்ந்து, 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட உள்ளது.
மூன்றடுக்கு பாதுகாப்பு:
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்குமான 2 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதன்படி முதல் அடுக்கில் துணை ராணுவ வீரா்களான மத்திய தொழிற்பாதுகாப்பு படையினா், இரண்டாம் அடுக்கில் பட்டாலியன் போலீஸாா், மூன்றாம் அடுக்கில் மாவட்ட ஆயுதப்படை போலீஸாா் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். இந்த 3 அடுக்கிலும் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் துணை ராணுவ வீரா்கள், பட்டாலியன் போலீஸாா், ஆயுதப்படை போலீஸாா் என 652 போ் ஈடுபட்டு வருகின்றனா். இதுதவிர வாக்கு எண்ணிக்கை மையத்தின் வெளிப்புறத்தில் மாவட்ட போலீஸாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.
இந்த பாதுகாப்புப் பணி வாக்கு எண்ணிக்கை நாளான 4 ஆம் தேதி வரை தொடரும். வாக்கு எண்ணிக்கை நாளில் கூடுதல் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைப்பு - மூன்றடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பிவைப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைப்பு

வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைக்கும் பணி ஆய்வு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


