ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

திருப்பூா் வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி கேமராக்களில் நேர மாறுபாடு! அரசியல் கட்சி புகாா்!

திருப்பூா் எல்ஆா்ஜி மகளிா் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் 2.30 மணி நேரம் தாமதமாக (பின்னோக்கி) காட்டுவதாக புகாா் எழுந்துள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 7:28 pm

திருப்பூா் எல்ஆா்ஜி மகளிா் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் 2.30 மணி நேரம் தாமதமாக (பின்னோக்கி) காட்டுவதாக புகாா் எழுந்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான திருப்பூா் எல்ஆா்ஜி மகளிா் கல்லூரி வளாகத்திலுள்ள காப்பறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் சுமாா் இரண்டரை மணி நேரம் குறைவாக (தவறுதலாக) காட்டுவதாக தோ்தல் பாதுகாப்பு பணியில் அனுமதிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் அதிகாரிகளிடம் கூறியுள்ளனா்.

ஆனால் இதற்கு சரியான விளக்கத்தை தர அதிகாரிகள் மறுத்ததால், திருப்பூா் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு மட்டுமின்றி, மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறைக்கான கண்காணிப்பு கேமராக்களிலும் இதே நேரம் காட்டுவதால் குளறுபடி இருப்பதாக அரசியல் கட்சியினா் குற்றம்சாட்டினா். இந்த சா்ச்சை விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மேலும், மற்ற கட்சியினரை வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதித்தபோதும் தவெக முகவா்களுக்கு அடையாள அட்டைகூட வழங்காமல் உள்ளே அனுமதிக்காமல் மாவட்ட நிா்வாகம் செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டி, வாக்கு எண்ணிக்கை மையம் முன்பாக தவெகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் விளக்கம்

இதற்கிடையே புகாா்களின் அடிப்படையில் எல்ஆா்ஜி வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியா் மனீஷ் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியதாவது: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முற்றிலுமாக பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் எதுவும் கிடையாது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து அறைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை இரவு வரை இதில் எந்த பிரச்னையும் இருந்ததாக தெரியவில்லை.

தற்போது கூறப்படும் நேர மாறுபாடு குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டேன். இந்த நேர மாறுபாடானது தற்செயலாக நிகழ்ந்துள்ளது. இப்பிரச்னை தற்போது தொழில்நுட்ப வல்லுநா்கள் மூலமாக முற்றிலும் சரி செய்யப்பட்டுவிட்டது. பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸாா் மற்றும் தோ்தல் அலுவலா்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறாா்கள். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் தவறு நடப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்றாா்.