பெருமாநல்லூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில் 800-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 நாள்களே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், இன்று (ஏப். 14) மாலை 4 மணி அளவில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றி கழக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை தினம் என்பதால், அதிகளவில் கூடும் என்ற நிலையில், விஜய் பிரசாரம் நடைபெறும் பகுதி முழுவதும் காவல்துறையின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரசாரம் நடைபெறும் பகுதியில் உள்ள அனைத்து மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் மீது தொண்டர்கள் ஏறாமல் இருக்க தகர சீட்டுகள் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.
மேலும், வாகனப் பேரணி மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் (பேரிகார்டு) வைத்து தொண்டர்கள் உள்ளே நுழையாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, அவிநாசியில் சாலைவலம் மேற்கொள்ள உள்ளதால் அந்தப் பகுதியிலும் காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவ் நேரில் வந்து ஆய்வுகளை மேற்கொண்டார். தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
விஜய்யைப் பார்க்க இந்த நிகழ்ச்சிக்கு தவெகவின் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் என ஏராளமானோர் காலை 10 மணி முதலே இந்த பகுதியில் குவியத் துவங்கியுள்ளனர்.
இதையும் படிக்க... அம்பேத்கரின் லட்சியப் பாதையில் பயணிப்போம்! - விஜய் புகழஞ்சலி
Summary
As Tamilaga Vettri Kazhagam President Vijay is set to campaign today in Perumanallur, Tiruppur district, more than 800 police personnel have erected barricades and are engaged in security duties.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... ரசிக வெறியும் அரசியல்மயமும்
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

சென்னையில் விஜய் பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு!
தமிழக மக்களுக்கு நன்றிக் கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்தேன்: விஜய்
விடியோக்கள்

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

