வாடகைதாரர்கள் தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்த முடியுமா?திட்டமிட்டபடி ஜூன் 1 பள்ளிகள் திறப்பு! அமைச்சர் ராஜ்மோகன் கேரள முதல்வர் பதவியேற்பு! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?கேரள முதல்வராக பதவியேற்றார் வி.டி. சதீசன் அதிமுகவில் இருந்து செம்மலை விலகல் பிகார்: நடைமேடையில் நிறுத்தப்பட்டிருந்த பயணிகள் ரயிலில் தீ விபத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு
/

அம்பேத்கர் கனவை நனவாக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்! இபிஎஸ்

அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துச் செய்தி...

News image

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி - X / EPS

Updated On :14 ஏப்ரல் 2026, 11:39 am IST

அம்பேத்கர் கனவை நனவாக்க ஒன்றிணைந்து செயல்பட உறுதியேற்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படும் நிலையில், அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

"சமத்துவம், சமூக நீதி, மானுடப் பற்று ஆகியவற்றின் சின்னமாக விளங்கிய சட்டமேதை, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கriன் பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றி வணங்குகிறேன்.

அவரின் சிந்தனைகளும், அரசியல் பார்வையும் இந்திய அரசியலமைப்பின் அடித்தளமாக அமைந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தியது.

சமத்துவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இந்நாளில் உறுதியேற்போம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Let us work together to realize Ambedkar's dream! — EPS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.