17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழக முதல்வர் காவல் பதக்கம்! வழங்கி சிறப்பித்த காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ்!

தமிழக காவலர்களுக்கான முதல்வர் பதக்கத்தை வழங்கி சிறப்பித்தார் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ்.

News image

முதல்வர் பதக்கம்

Updated On :6 ஜூன் 2026, 10:58 am IST

2026ஆம் ஆண்டின் தமிழக முதல்வரின், காவலர் பதக்கங்களை, சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 300 காவல்துறையினருக்கு, காவல் ஆணையர் ஏ. அமல்ராஜ் இன்று வழங்கி சிறப்பித்தார்.

தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்து 10 ஆண்டுகள் மெச்சத்தகுந்த வகையில் எந்தவித தண்டனைகளும் இன்றி பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார்களுக்கு தமிழக முதலமைச்சர் அவர்களால் ஆண்டுதோறும் காவலர் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அதில் சென்னை பெருநகர காவல் சட்டம் - ஒழுங்கு பிரிவில் 157 காவலர்கள் மற்றும் தலைமை காவலர்கள், போக்குவரத்து காவல் நிலையங்களைச் சேர்ந்த 94 போலீசார்கள் ஆயுதப்படை மற்றும் மோட்டார் வாகனப்பிரிவு (AR & MT), நுண்ணறிவுப்பிரிவு (IS), மத்திய குற்றப்பிரிவு (CCB), நவீன காவல் கட்டுப்பாட்டறை (MCR), சென்னை பாதுகாப்பு காவல் பிரிவு (SCP), உயர்நீதிமன்ற பாதுகாப்பு காவல் பிரிவு (High Court Security), குற்ற ஆவண காப்பகம் (CRB), விபச்சார தடுப்புப்பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் 49 போலீஸார்கள் என சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 300 ஆண் மற்றும் பெண் போலீசார்களுக்கு இன்று காலை, எழும்பூர், இராஜரத்தினம் மைதானத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்களை வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து, பதக்கங்கள் வழங்கினார்.

இதனை தொடர்ந்து காவல் ஆணையர் அவர்கள் ஆற்றிய சிறப்புரையில், காவல் துறையில் பதக்கங்கள் பெறுவது என்பது மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி, சிறப்பான பணி செய்ததற்காக பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. பல ஆண்டுகள் காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காவும் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன

செய்ய வேண்டிய செயல்களை செய்ய வேண்டிய தருணங்களில் செய்யாமல் இருப்பதும் தவறு, செய்யக் கூடாத செயல்களை செய்வதும் தவறு. காவல் துறையில் இந்த இரண்டு விஷயங்கள் பெருமையாக பார்க்கப்படுகிறது.

மக்களுக்கு உதவ வேண்டிய தருணத்தில் உதவுவது பெருமை தரக்கூடியது, அதே போல இக்கட்டான சூழ்நிலையில் பிரச்னைகளை எதிர்கொள்ளும் போது கண்ணியமாக அமைதி காத்து செயல்படுவதும் என்பதும் பெருமை தரக்கூடியது.

இந்த பெருமை தரக் கூடிய காரியங்களை செய்ததன் வாயிலாக இன்று பதக்கங்கள் பெற்று நெஞ்சம் நிமிர்த்தி நிற்கின்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார்கள் அனைவருக்கும் பாரட்டுதல்களை தெரிவித்தார்.

பதக்கங்கள் பெறுவது ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷமாக இருந்தாலும், அதை விட முக்கியமான ஒன்று உள்ளது,

அது என்ன என்றால் இந்த பதக்கங்களை அணிவதற்கு தகுந்தவர்களாக தம்மை ஆக்கிகொள்வது, பதக்கங்கள் அணிவதற்கு தகுந்தவர்களாக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள் கே.ஜோசி நிர்மல் குமார் (தலைமையிடம்), ஜி.கார்த்திகேயன் (போக்குவரத்து), பிரவேஷ்குமார் (வடக்கு), கே.எஸ். நரேந்திர நாயர் (தெற்கு), ஏ.ராதிகா, (மத்திய குற்றப்பிரிவு) மற்றும் இணை ஆணையர்கள், அனைத்து மாவட்ட துணை ஆணையர்கள், ஆயுதப்படை துணை ஆணையர்கள், காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் காவல்துறையினரின் குடும்பத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Summary

Police Commissioner A. Amalraj presented the Chief Minister's Medal to the Tamil Nadu police officers.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.