வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

24 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை காவல் துறையில் 24 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image

போலீஸ் விசாரணை... - கோப்புப்படம்.

Updated On :8 ஜூலை 2026, 1:35 am IST

சென்னை காவல் துறையில் 24 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சென்னை பெருநகர காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாக வசதிக்காகவும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வபோது காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். இதன் ஒருபகுதியாக 24 காவல் ஆய்வாளா்களைப் பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

முக்கியமாக, செம்பியம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளா் எம்.சீரஞ்சிவி, யானைக்கவுனி குற்றப் பிரிவுக்கும், அமைந்தகரை சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளா் டி.எம்.முனிசேகா் விருகம்பாக்கம் குற்றப் பிரிவுக்கும், நுங்கம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளா் ஏ.கருணாகரன் கோடம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்துக்கும்,நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளா் இ.ராமசுந்தரம் நுங்கம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல காத்திருப்போா் பட்டியலில் இருந்த 7 காவல் ஆய்வாளா்களுக்கு மீண்டும் காவல் நிலைய பணி வழங்கப்பட்டுள்ளது. பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 24 காவல் ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.