அரசுப் பள்ளிக்குச் சென்று மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பி, மாணவி பதில் சொல்லாமல் இருந்ததை விமர்சித்த அமைச்சர் கீர்த்தனாவின் நடவடிக்கையால், ஹேட்ஸ் ஆப் என்பதற்கு பதிலாக ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்று சொன்ன விடியோ வைரலாகி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் பங்கேற்றிருந்தார். அதில், ஹேட்ஸ் ஆஃப் டு ஆல் என்பதற்கு பதிலாக ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்று பேசியிருந்த விடியோவை பலரும் வைரலாக்கியிருக்கிறார்கள்.
தமிழ்நாடு தொழில், முதலீட்டு ஊக்கத் துறை அமைச்சர் கீர்த்தனா சில நாள்களுக்கு முன் திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசுப் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது பள்ளி மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். அந்த மாணவி பதில் சொல்லத் தயங்கிய நிலையில், இவரே இப்படி என்றால், கடைசி பெஞ்சில் இருப்பவர்கள் என்று விமர்சித்ததோடு, ஆசிரியரிடம் ஆங்கில வகுப்புகளை மேம்படுத்துமாறு அமைச்சர் கீர்த்தனா வலியுறுத்தினார். அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அமைச்சர் ஒருவர் இவ்வாறு அரசுப் பள்ளி மாணவியிடம் கேள்வி எழுப்புவது, கடைசி பெஞ்ச் குறித்து விமர்சிப்பது நாகரிகமற்றது எனற அமைச்சர் கீர்த்தனா மீது பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
அமைச்சர்கள் ஆய்வு செய்யுங்கள். ஆனால், அதனை விடியோ எடுத்து ரீல்ஸ் ஆக்காதீர்கள். அந்த மாணவியின் மனநிலை இன்று எவ்வாறு இருக்கும். மாணவி பள்ளிக்கு தொடர்ந்து வருவாரா? ஆசிரியர்களுக்கு எந்த அளவுக்கு அழுத்தம் ஏற்பட்டிருக்கும் என்பதெல்லாமும் பேசுபொருளாகியிருக்கிறது.
இந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக அரசு பள்ளியில் தான் படித்தபோது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து அமைச்சர் கீர்த்தனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “இன்று சிலர், ’அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்’ என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள். இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செய்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழியில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசுப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு! காரணம் என்ன?

அரசுப் பள்ளிகள் மீதான வெறுப்பு; சாதனைகளையும் அறியுங்கள்! கீர்த்தனாவுக்கு அன்பில் மகேஸ் பதில்!
அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்

நானே ஒரு அரசு பள்ளி மாணவி: விமர்சனங்களுக்கு அமைச்சர் கீர்த்தனா பதில்!
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


