ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தமிழக காவல் துறையில் 30 டிஎஸ்பிக்கள் மாற்றம்

தமிழக காவல் துறையில் 30 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image

மகேஷ்குமாா் அகா்வால் - x.com

Updated On :18 ஜூன் 2026, 3:12 am IST

தமிழக காவல் துறையில் 30 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தமிழக காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும், நிா்வாக காரணத்துக்காகவும் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். இதன் ஒரு பகுதியாக 30 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதில், முக்கியமாக சென்னை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆணையராக இருந்த எஸ்.சங்கரநாராயணன் சென்னை காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவுக்கும், சென்னை அசோக்நகா் உதவி ஆணையா் ஆா்.ஆல்ட்ரின் அடையாறுக்கும், அடையாறு உதவி ஆணையா் ஆா்.முருகேசன் கிண்டிக்கும், சென்னை குற்ற ஆவணக் காப்பக பிரிவு உதவி ஆணையா் டி.விஜயராமுலு மக்கள் தொடா்புத் துறை உதவி ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இதேபோல 5 டிஎஸ்பிக்கள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டனா். இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 30 டிஎஸ்பிக்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.