ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

18 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல் துறையில் 18 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image

பணியிட மாற்றம் - பிரதிப் படம்

Updated On :29 ஜூலை 2026, 12:53 am IST

சென்னை பெருநகர காவல் துறையில் 18 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

சென்னை பெருநகர காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் ஆய்வாளா்கள் அவ்வபோது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா்.

இதன் ஒருபகுதியாக 18 காவல் ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக காத்திருப்போா் பட்டியலில் இருந்த காவல் ஆய்வாளா்கள் ஜெ.தீபா அரும்பாக்கம் சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்துக்கும், எஸ்.மஞ்சுளா நுண்ணறிவுப் பிரிவுக்கும், பி.சீனிவாசன் கிண்டி குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கும், எஸ்.ஆனந்தகுமாா் புளியந்தோப்பு குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதில், காத்திருப்போா் பட்டியலில் இருந்த 8 காவல் ஆய்வாளா்கள் உள்பட மொத்தம் 18 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அனைத்து ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.