நீட் போராடத்தில் கேரளத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய பினராயி விஜயனின் கடிதத்தை அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. அவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.
இந்தப் போராட்டத்தின் போது, சிஜேபி ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதன் பிறகு போராட்டம் நாடு முழுவதும் வெடித்தது. தர்மேந்திர பிரதானின் ராஜிநாமைவையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
நாடு முழுவதும் பரவிய போராட்டம் கேரளத்திலும் தீவிரமடைந்தது. அங்கு போராடிய 5,000 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ததாகவும் அவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் கேரள முதல்வர் வி.டி. சதீசனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதினார். இந்தக் கடிதத்தை அடுத்த கட்ட நடவடிக்கைக்காக கேரள உள்துறை அமைச்சகத்துக்கு வி.டி. சதீசன் அனுப்பியுள்ளார்.
முன்னதாக, தில்லியில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ், கேரளத்தில் போராட்டக்காரர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாக பினராயி விஜயன் தனது எக்ஸ் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Summary
Kerala Chief Minister V.D. Satheesan has forwarded to the Ministry of Home Affairs the letter from Pinarayi Vijayan requesting the quashing of the case registered in the state regarding the NEET protest.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தில் கனமழை, நிலச்சரிவால் 8 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

கேரளத்தில் நிலச்சரிவு; எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்கத் தயார்: வி.டி. சதீசன்

‘கனிம வள ஏற்றுமதிக்கான தடையை நீக்குக’... தமிழக அரசுக்கு கேரள முதல்வர் சதீசன் கடிதம்!

நீட் போராட்டம்: காங்கிரஸ் ஆளும் கேரளத்தில் 5,000 பேர் மீது வழக்கு ஏன்? பினராயி விஜயன் கேள்வி!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK




