/

மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்கா

மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா என்றும், தவறுக்கு மத்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் பிரியங்கா வலியுறுத்தியிருக்கிறார்.

News image

மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பேசியபோது... - sansad tv

Updated On :28 ஜூலை 2026, 5:47 pm IST

புது தில்லியில், ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அவர்கள் என்ன தீவிரவாதிகளா? என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த பொதுத் தேர்வுகள் முறைகேடு திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மாலை காங்கிரஸ் எம்.பி பிரியங்கா விவாதத்தில் பங்கேற்று பேசுகையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? மாணவர்கள் மீது பெல்லட் குண்டுகள், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியது ஏன்?

ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் காந்தியின் அகிம்சை வழியில்தான் போராட்டினார்கள். எனினும் அவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதற்கு உத்தரவிட்டு அனுமதி வழங்கியது யார் என்றும் பிரியங்கா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நீட் வினாத்தாள் கசிவை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தவறுக்குப் பொறுப்பேற்று மத்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி வலியுறுத்தியிருக்கிறார்.

நாட்டின் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அனைத்துத் துறைகளையும் இந்த மத்திய அரசு பலவீனப்படுத்திவிட்டது. தேர்வு முறையும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 152 முறை வினாத்தாள்கள் கசிந்துள்ளன. கோடிக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இதுவரை வினாத்தாள் கசிவு கும்பலைச் சேர்ந்த ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை.

தற்போது கல்வி அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்டிருப்பவர் கர்பிணியை பலாத்காரம் செய்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டபோது தன்னுடைய ஆதரவையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியவர் என்று கூறினார்.

இதற்கு மத்திய இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ கடும் கண்டனம் தெரிவித்துக் கொண்டதோடு, நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து பிரியங்கா காந்தியின் பேச்சு நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Summary

Are the students terrorists? An apology must be offered for the mistake: Priyanka

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.