நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து இரண்டாவது வாரத்தின் முதல் நாளும் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால் கடந்த வாரம் முழுவதும் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின.
இந்த நிலையில், மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், கடந்த சனிக்கிழமை பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
தொடர்ந்து, வினாத்தாள் கசிவு உள்பட அரசுத் தோ்வு முறைகேடுகளுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் மத்திய அரசு இன்று தாக்கல் செய்யவுள்ளது.
இந்த நிலையில், இரண்டாவது வாரத்தின் முதல் நாள் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியவுடன், சிஜேபி போராட்டத்தில் மாணவர்கள் மீதான காவல்துறை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பகல் 12 மணிவரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டத்தில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு யார் ஒப்புதல் அளித்தது எனக் கேள்வியெழுப்பி மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
Summary
Uproar by opposition parties - Parliament stalled for the second consecutive week!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடரும் எதிர்ப்பு... கருப்பு உடையில் நாடாளுமன்றம் வந்த ராகுல், காங்கிரஸ் எம்.பி.க்கள்!

நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!

மாணவர்கள், இளைஞர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி! சிஜேபி - காவல்துறை இடையே தள்ளுமுள்ளு







