பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது பற்றி...

News image

மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி - SCREENGRAB VIA SANSAD TV

Updated On :21 ஜூலை 2026, 2:52 pm IST

சிஜேபி போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்களை காவல்துறையினர் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், இன்று நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி ஆயிரக்கணக்கான இளைஞர்களும் மாணவர்களும் அமைதிப் பேரணி நடத்த முயற்சித்தனர்.

ஆனால், அவர்களின் பேரணிக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு, துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு, தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மேலும், மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதுடன், கண்ணீர் புகைக்குண்டுகளை எறிந்து தாக்குதல் நடத்தினர்.

நாடு முழுவதும் தில்லி காவல்துறை செயல்பாட்டுக்கு கண்டனம் எழுந்த நிலையில், இன்றைய நாடாளுமன்ற கூட்டம் கூடியவுடன் இரு அவைகளிலும் மாணவர்களை தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து, எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் இரு அவைகளில் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாணவர்கள் போராட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

ஆனால், பிற்பகல் 2 மணிக்கு இரு அவைகளும் கூடிய நிலையில், சிஜேபி போராட்டம், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதிக்க மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், நாளை (ஜூலை 22) காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

Summary

Uproar continues in Parliament - Both Houses adjourned until tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.