ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு!

மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை ராகுல் காந்தி சந்தித்தது பற்றி...

News image

மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை ராகுல் காந்தி சந்திப்பு - X | Rahul Gandhi

Updated On :21 ஜூலை 2026, 12:45 pm IST

சிஜேபி ஆதரவாளர்கள் மீதான தாக்குதல், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக விவாதிக்கக் கோரி மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை நேரில் சந்தித்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்தார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வலியுறுத்தி, கரப்பான் பூச்சி ஜனதா (சிஜேபி) சார்பில் நாடாளுமன்றம் நோக்கி நேற்று அமைதிப் பேரணி நடத்தப்பட்டது.

இந்த பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், தடையை மீறிச் செல்ல முயன்ற இளைஞர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் தாக்கினர்.

இதற்கு கண்டனம் தெரிவித்தும், இளைஞர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக விவாதிக்கக் கோரியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களுடன் சென்று மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை ராகுல் காந்தி சந்தித்தார்.

இதுதொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு ராகுல் காந்தி பதிவிட்டிருப்பதாவது:

”இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் மக்களவை தலைவரைச் சந்தித்தேன்.

எங்கள் கோரிக்கை எளிமையானது: நேற்று மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரம் குறித்தும், தேர்வு நெருக்கடிக்கு அரசு முற்றிலும் பொறுப்பேற்காமல் இருப்பது குறித்தும் நாடாளுமன்றம் விரிவாக விவாதிக்க வேண்டும்.

தங்கள் எதிர்காலம் குறித்த நியாயமான கேள்விகளைக் கேட்டதற்காக மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

இந்திய இளைஞர்களின் எதிர்காலம் குறித்து நாடாளுமன்றத்தால் விவாதிக்க முடியாவிட்டால், அது எதற்கு இருக்கிறது?

இதை மூடிமறைக்க எதிர்க்கட்சி அனுமதிக்காது. மாணவர்களின் குரல் வீதிகளிலும், நாடாளுமன்றத்திலும் கேட்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Lok Sabha Opposition Leader Rahul Gandhi meets Speaker Om Birla - Demands discussion about attack on students

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.