இந்தியாவின் கல்வி அமைப்பு நேர்மையற்ற பணம் பறிக்கும் இயந்திரமாக மாறிவிட்டதாகவும், இத்துறையில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
ஊழல், அநீதி, பாரபட்சம், நேர்மையற்றவை இந்த நான்கு வார்த்தைகளும் இந்தியாவின் கல்வி அமைப்பைக் குறித்து நாட்டின் மாணவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளாகும்.
உண்மை சொல்லவேண்டுமென்றால், இந்தியாவின் கல்வி அமைப்பு தற்போது நேர்மையற்ற, பணம் பறிக்கும் இயந்திரமாக மாறிவிட்டது.
மாணவர்களின் எதிர்காலத்திற்குத் தயார்ப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்த கல்வி அமைப்பு, அவர்களையும் அவர்களது குடும்பங்களையும் கடன், மன அழுத்தம், விரக்திக்குத் தள்ளப்படுகிறது.
கல்வி அமைப்பில் நடைபெறும் தொடர் ஊழல்கள்தான் வினாத்தாள் கசிவு மாஃபியாவை உருவாக்கியுள்ளது. இது தேர்வுக்குத் தயாராகும் லட்சக்கணக்கான மாணவர்களின் பல ஆண்டுக்கால கடின உழைப்பை ஒரேயடியாகப் பறித்துவிடுகிறது.
தவறு செய்த விற்பனையாளர்களும், அதிகாரிகளும் ஒப்பந்தங்களையும் பதவி உயர்வுகளையும் பெறுகிறார்கள். ஆனால், சிதைந்துபோன கனவுகளுடன் தனித்து விடப்படும் மாணவர்களுக்குத்தான் தண்டனை கிடைக்கிறது.
மோடி அரசும் கல்வி அமைச்சரும் இதையெல்லாம் மௌனமாக பார்த்துக்கொண்டிருப்பது ஏன்? அவர்கள் பொறுப்புக்கூறலில் இருந்து விலகி நிற்பது ஏன்? ஊடகங்களோ? நீண்ட மௌனம்.
இனியும் பொறுக்க முடியாது. பிரதமர் மோடி மௌனத்தை கலைக்க வேண்டும். கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்த வேண்டிய நேரமிது. இவ்வாறு அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.
Congress leader Rahul Gandhi asserted that India's education system has turned into a dishonest, money-extorting machine and emphasized the need for a revolution in the sector.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











